சுடச்சுட

    

    ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் போராடியிருந்தால் நல்ல தீர்வு கிடைத்திருக்கும்: வைகோ

    By DIN  |   Published on : 30th January 2017 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் ஒன்றிணைந்து போராடியிருந்தால் நல்ல தீர்வு கிடைத்திருக்கும் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.
    பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 29-வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 9 மாணவர்கள் உள்பட 700 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் அளித்த வைகோ மேலும் பேசியது:  
    1900-ல் ஜெர்மனியில் பிறந்த தந்தை ரோவர் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 1.2.1947-ல் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒரு மதபோதகராக வந்து சமூக நலப் பிரச்னைகளுக்கு தீர்வு கல்வி என்பதை மனதில் வைத்து, சிறிய அளவிலான மாணவர் காப்பகத்தை உருவாக்கினார். இதனால், இப்பகுதியை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
    மாணவர்கள் வெளிச்சமாக திகழ வேண்டும். எரிந்து பிரகாசிக்கும் விளக்காகவும் இருக்க வேண்டும். துன்பப்படுபவர்களுக்கு உதவும் நல்ல மனிதனாக இருக்க வேண்டும். மது அருந்துவதால் புராணக் காலங்கள் முதல் மனிதன் படுதோல்வியையே சந்தித்திருக்கின்றான். இதனால், மாணவர்கள் மதுவிற்கு எதிராக தொடர்ந்து ஒற்றுமையுடன் போராட வேண்டும். அப்போதுதான் மதுவிலக்கு பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
    வாழ்க்கை என்பது, மொழி, உணவு, உடை மட்டுமன்றி மனிதனின் உணர்வுகளில்தான் உள்ளது. மாணவர்கள் ஒவ்வொருவரும் பெற்றோரை மதிப்பதோடு, தன்னம்பிக்கையோடு வாழ்வில் முன்னேற வேண்டும்.
    மாணவர்கள் ஒற்றுமையுடனும், தன்னம்பிக்கையுடனும் போராடினால் எதையும் சாதித்துக் காட்ட முடியும்.
    கடந்த வாரம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டமே இதற்கு முன்னுதாரணம். இதேபோல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து போராடியிருந்தால், நல்ல தீர்வு கிடைத்திருக்கும் என்றார் அவர்.
    தொடர்ந்து, கல்லூரி முதல்வர் முனைவர் வெ. அயோத்தி 2016- 17 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை வாசித்தார்.  
    கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் எம்.பி. அ. கணேசமூர்த்தி, அறக்கட்டளை உறுப்பினர் மஹாலட்சுமி வரதராஜன், துணைத் தலைவர் வி. ஜான் அசோக், ரோவர் கல்விக் குழுமங்களின்
    இயக்குநர் பாலமுருகன், தேர்வு நெறியாளர் முனைவர் ஏ. முருகேசன், துணை முதல்வர் அ. மகேந்திரன், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai