சுடச்சுட

  

  பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்டக் குழு கூட்டம், மாவட்டத் தலைவர் ஏ. கருப்பையா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொதுச்செயலர் மரு. பாஸ்கரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
  கூட்டத்தில், முத்தரையர் தலைப்பிட்ட பட்டியலில் உள்ளவர்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆலத்தூர் வட்டம், சாத்தனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பாதுகாப்பின்றி கிடக்கும் கல்மர படிமங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் முகிலன், பால கதிரேசன், தொழிலாளர் அணிச்செயலர் சக்திவேல், சிறு குறு தொழிலதிபர் அணிச்செயலர் செந்தில் இளமான், வழக்குரைஞர் சிவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai