சுடச்சுட

    

    பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69 ஆவது பிறந்த நாளையொட்டி, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்திற்கு தலைமை வகித்து, மாவட்ட செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன் பேசியது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பிப். 24 ஆம் தேதி கொடண்டாடப்பட உள்ளது. தமிழக மக்களின் நலனுக்காக, தனது வாழ்வை அர்ப்பணித்த அவரது பிறந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு கட்சியினர் தங்களால் முயன்ற உதவிகளை செய்ய வேண்டும். அன்றைய தினம், கட்சி நிர்வாகிகள் சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது என்றார் அவர்.
    கூட்டத்திற்கு, மக்களவை உறுப்பினர்கள் ஆர்.பி. மருதைராஜா (பெரம்பலூர்), மா. சந்திரகாசி (சிதம்பரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலர் சிவப்பிரகாசம், மாவட்ட இணைச் செயலர் ராணி, பொருளாளர் பூவை த. செழியன், அம்மாபேரவை செயலர் கார்த்திக், அணி செயலர்கள் எம்.என். ராஜாராம், குலோத்துங்கன், மா. வீரபாண்டியன், நகர செயலர் ஆர். ராஜபூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai