சுடச்சுட

  

  எண்ணெய் நிறுவன மேலாளர்கள் பங்கேற்க வேண்டும்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 31st January 2017 07:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
  பெரம்பலூர் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்ட அரங்கில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், மாவட்ட வழங்கல் அலுவலர் ப. கள்ளபிரான் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
  இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் பேசியது:
  எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர் கூட்டங்களில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளை களைய, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள் பங்கேற்க வேண்டும். எதிர்பாராதவிதமாக நிகழும் விபத்துகளில் வீடுகளை இழப்போருக்கு உரிய காலத்தில் நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல, தீக்காயம் அல்லது உயிரிழப்போருக்கு காப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்க வேண்டும்.மேலப்புலியூர் செந்தில்குமார் பேசியது:கிராமங்களில் விநியோகிக்கப்படும் சிலிண்டர்களுக்கு ரசீது வழங்குவதில்லை. இதுகுறித்து, விநியோகம் செய்யும் நபர்களிடம் கேட்டால், பதில் அளிக்க மறுப்பதோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். எனவே, சிலிண்டர்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நுகர்வோருக்கான ரசீதுகளை வழங்க வேண்டும் என்றார்.
  துங்கபுரம் முருகேசன் பேசியது:
  வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை ஒருசில எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டிற்காக விற்பனை செய்கின்றன. இவற்றை தவிர்க்க, அடிக்கடி சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
  அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் பி. ரமேஷ் பேசியது:சிலிண்டர் விலை மாற்றத்தால் நுகர்வோர் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, எரிவாயு உருளைகளுக்கு நிரந்தரமாக நிலை நிர்ணயம் செய்ய வேண்டும்.  தொடர்ந்து, நுகர்வோரின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வட்ட வழங்கல் அலுவலர் கள்ளபிரான்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai