சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி, சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தில் உள்ள மண் சாலைகளை சீரமைக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் மற்றும் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கிராம மக்கள் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறதாம். ஆனால், சாலைகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
    இந்நிலையில், கடந்த 2 நாள்களாக அப்பகுதியில் பரவலாக பெய்த மழையால் மண் சாலைகள் அனைத்தும் சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் மண் சாலையை சீரமைக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பேரளி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் மண் சாலையை, சிமெண்ட் சாலையாக அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அரசு அலுவலர்கள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai