சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க. முனுசாமி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:மார்ச், ஏப்ரல் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் ஜனவரி 29 ஆம் தேதி வரை தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் பிப். 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai