சுடச்சுட

  

  பெரம்பலூரில் ஜே. தீபா ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு தலைமை வகித்து, முன்னாள் எம்எல்ஏ பா. இளவழகன் பேசியது: சட்டரீதியாக தீபா பேரவை தொடங்கப்பட உள்ளது. அதற்கான அதிகாரபூர்வமான உறுப்பினர் படிவம் விரைவில் வழங்கப்படும். மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலில் தீபா பேரவை வேட்பாளர்கள் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்றார் அவர். கூட்டத்துக்கு, பேரவை ஒருங்கிணைப்பாளர்களான பிச்சை, மணிசேகரன், புகழேந்தி, தங்கவேல், புவனேந்திரன், குணசேகரன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி சுப்ரமணியன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் அ. வேல்முருகன், கலைவாணன், முன்னாள் ஒன்றிய செயலர் பெரியசாமி, அண்ணாதுரை, லாடபுரம் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai