சுடச்சுட

    

    பெரம்பலூரில், ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை ஆட்சியர் க. நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 259 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, குறித்த காலத்துக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதில் அளிக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 259 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) மு. துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆர். பிரேமாவதி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai