சுடச்சுட

    

    பெரம்பலூர் மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாகவுள்ள ஒரு மீன்வள உதவியாளர் பணியிடத்துக்கு (பொதுப்பிரிவு) விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார் ஆட்சியர் க. நந்தகுமார்.
    தமிழில் பேச, எழுத, படிக்க, நீச்சல் மற்றும் மீன்பிடிக்கத் தெரிய வேண்டும். மீன்பிடி வலை பின்னவும், அறுந்த வலைகளை சீரமைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மீன்வளத் துறையின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டமைக்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர் 1.5.2016-ல் 30 வயதிற்குள்பட்டவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வயது உச்ச வரம்பு 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தகுதியுடைய நபர்கள் சான்றொப்பமிட்ட தங்களது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை நகல் மற்றும் 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் கூடிய விண்ணப்பத்தை, பிப். 1 முதல் 10 ஆம் தேதிக்குள் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை மீன்வளத் துணை இயக்குநர் (மண்டலம்), 17-2, சமது பள்ளித்தெரு, காஜாநகர், திருச்சி- 20 என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai