Enable Javscript for better performance
கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் 2 ஆடைகள் வாங்கினால் 1 இலவசம் என்ற சிறப்பு விற்பனைத் திட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்த்ரா.
    2 ஆடைகள் வாங்கினால் 1 இலவசம் என்ற சிறப்பு விற்பனைத் திட்டம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோவை, மதுரை, சேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நெசவாளர்கள் கலைநயத்துடன் தயாரித்த இயற்கை சாயமிட்ட கைத்தறி பருத்திச் சேலைகள், நெகமம் சேலைகள், செட்டிநாடு சேலைகள் மற்றும் கூறைநாட்டுச் சேலைகள், கண்கவரும் ஜெயகார்த்திகா சேலைகள் ஆகியவை விற்பனைக்கு உள்ளன.
    மேலும் ஆண்களுக்கான 100 சதவீத பட்டுச் சட்டைகள், பருத்திச் சட்டைகள், லினன் காட்டன் சட்டைகளும் விற்பனைக்கு உள்ளன. இத்திட்டத்தின் மூலம் கடந்தாண்டு தஞ்சை மண்டலத்தில் ரூ. 246.39 லட்சத்துக்கு விற்பனையானது.  
    நிகழாண்டு ரூ. 3 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கடந்தாண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 6.70 லட்சத்துக்கு விற்பனையானது. நிகழாண்டு ரூ. 8 லட்சத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம்  தெரிவித்துள்ளது.   
    தொடக்க நிகழ்ச்சியில் கோ- ஆப்டெக்ஸ் தஞ்சாவூர் மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என். மாதேஸ்வரன், டி. சூரியநாராயணா, ரக மேலாளர் ஏ. சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai