Enable Javscript for better performance
தட்டுப்பாடின்றி சிலிண்டர் விநியோகிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி எரிவாயு உருளைகளை விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    பெரம்பலூர் ஆட்சியரகப் பொதுமக்கள் குறைதீர் கூட்டரங்கில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பி. வேலு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்தில் பங்கேற்ற நுகர்வோர் பேசியது:எரிவாயு உருளைகளின் விலை மாதந்தோறும் உயர்த்தப்படுவதால் பாதிக்கப்படுகிறோம். இந்த விலையேற்றத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம், நுகர்வோருக்கு முறையாகத் தெரியப்படுத்த வேண்டும். எரிவாயு உருளைகள் வெடித்து தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படும். ஆனால், கடந்த 4 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இதுவரை எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.  
    நுகர்வோரின் கோரிக்கைகளை களைவதற்காக நடத்தப்படும் இக்கூட்டத்தில், சம்பந்தப்பட்ட முகவர்கள் பங்கேற்பதில்லை. மேலும், அண்மைக்காலமாக எரிவாயு உருளைகளை விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்து, உரிய காலத்தில் விநியோகிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் ஆர். ராஜாசிதம்பரம், ஏ.கே. ராஜேந்திரன், முருகேசன், செல்லக்கருப்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai