Enable Javscript for better performance
நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மார்ச் 2 தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறவுள்ள பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் 9,270 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் 24 மையங்களில் நடைபெற உள்ள தேர்வை 68 பள்ளிகளைச் சேர்ந்த 4,698 மாணவர்கள், 4,572 மாணவிகள் என மொத்தம் 9,270 பேர் எழுதவுள்ளனர். இத்தேர்வு மையத்துக்கு முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 32 தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதேபோல, 24 தேர்வு மையங்களுக்கும் துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக 32 ஆசிரியர்களும், 9 வழித்தடங்களில் வினாத்தாள்களை பாதுகாப்பான முறையில் எடுத்துச்செல்ல 9 வழித்தட அலுவலர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாக 546 ஆசிரியர்களும், 73 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    தேர்வுப் பணியில் ஈடுபடும் 692 ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
    மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களைக் கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 9 வழித்தட அலுவலர்களுடன், ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸார் மூலம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில்.. நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வை 8,095 பேர் எழுத உள்ளனர்.
    தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானதுமார்ச் 8-ல் தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம் என இரு கல்விமாவட்டங்கள் உள்ளன. இதில் அரியலூர் கல்வி மாவட்டத்தில் 8 மையங்கள்,உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் 18 மையங்கள் என 26 தேர்வு மையங்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வை 72 பள்ளிகளில் இருந்து 3,278 மாணவர்கள், 4,817 மாணவிகள் என 8,095 பேர் எழுதுகின்றனர்.
    இதேபோல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அரியலூர் கல்வி மாவட்டத்தில் 10 மையங்கள், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் 26 மையங்கள் என 36 மையங்களில் 164 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். அதன்படி 5,473 மாணவர்கள், 5,914 மாணவிகள் என 11,387 பேர் பொதுத்தேர்வைச் சந்திக்க உள்ளனர் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா. மாரிமுத்து.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai