Enable Javscript for better performance
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்:ரூ. 5 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ரூ. 5 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு

    By DIN  |   Published on : 01st March 2017 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் ரூ. 5 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
    காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். நிரந்தர வேலைவாய்ப்புகளில் அவுட்சோர்சிங் முறையை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 7 சங்கங்களை சேர்ந்த பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.  
    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கார்ப்பரேசன் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் உள்ளிட்ட அரசுடைமையாக்கப்பட்ட 56 வங்கிகளில் பணியாற்றும் சுமார் 550-க்கும் மேற்பட்ட வங்கி மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கிச் சேவைகள் மற்றும் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. பெரும்பாலான ஏ.டி.எம்கள் முறையாக இயங்காததால் வாடிக்கையாளர்கள் பாதிப்புக்குள்ளாகினர். பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்தப் போராட்டத்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் ரூ. 5 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
    அரியலூரில்... பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டத்தால் அரியலூரில் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.
    வேலைநிறுத்தப் போராட்டத்தை வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி செவ்வாய்க்கிழமை அரியலூர் மாவட்டத்தில் 46 தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்களும், 7 தனியார் வங்கி ஊழியர்களும் வேலைக்குச் செல்லாமல் வங்கிகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.
    இந்தப் போராட்டத்தால் பல கோடியிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. வங்கிகளில் பணம் போடவும், எடுக்கவும் வந்த பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.
    கல்லூரி செமஸ்டர் தேர்வுகளுக்கு பணம் கட்டி வரைவோலை பெறுவதற்கு செவ்வாய்க்கிழமை கடைசித் தேதி என்பதால் கல்லூரி மாணவர்களும், வங்கி தொடர்பான காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளைப் பெறமுடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai