Enable Javscript for better performance
வலைதள வடிவமைப்பு போட்டி:கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    வலைதள வடிவமைப்பு போட்டி: கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 01st March 2017 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி மாணவர்கள், மாநில அளவிலான வலைதள வடிவமைப்பு போட்டியில் 2 ஆம் பரிசு பெற்றனர்.  
    திருச்சி மாவட்டம், துறையூர் இமையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 24 ஆம் தேதி கணினி மற்றும் தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்கு மாநில அளவிலான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெப் டிசைன் எனப்படும் வலைதள வடிவமைப்பு போட்டியில் பங்கேற்ற 3 ஆம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவர்கள் வி. ஸ்ரீனிவாஸ், பி. சக்திவேல் ஆகியோர் 2 ஆம் இடம் பெற்றனர். இவர்களை கல்விக் குழுமங்களின் தலைவர் கி. வரதராஜன், துணைத் தலைவர் வ. ஜான் அசோக், கல்லூரி முதல்வர் முனைவர் வெ. அயோத்தி ஆகியோர் செவ்வாய்க்கிழமை பாராட்டி வாழ்த்தினர்.
    துணை முதல்வர் அ. மகேந்திரன், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவர் எம். அனுஷா பேராசிரியர் ஏ. சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai