Enable Javscript for better performance
அரசுப் பள்ளிக்கு கட்டட வசதி கோரி ஆட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே வடக்குமாதவி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டித்தர கோரி மாணவ, மாணவிகள் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
    இதுகுறித்து அந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  
    பெரம்பலூர் அருகே வடக்குமாதவி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் போதுமான வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகிறோம். சாலைகளில் செல்லும் வாகனங்கள் மற்றும் இதர பிர்சனைகளால் படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை.
    மேலும் வெயில், மழை, காற்று உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் அவதிக்குள்பட்டு வருகிறோம். மேலும், இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, எங்களது பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் கட்டித் தரவும், தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai