Enable Javscript for better performance
ஏரிகளில் குடிமராமத்து செய்யவிரும்புவோர் தகவல் அளிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    ஏரிகளில் குடிமராமத்து செய்ய விரும்புவோர் தகவல் அளிக்கலாம்

    By DIN  |   Published on : 02nd March 2017 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள விரும்புவோர் தகவல் அளிக்க அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்கட்டமாக குரும்பலூர், அரணாரை, பெரம்பலூர், துறைமங்கலம், எழுமூர், தழுதாழை, சாத்தனவாடி, தொண்டப்பாடி, செஞ்சேரி ஆகிய ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    குடிமராமத்து செய்ய முன்வரும் தனிநபர், நிறுவனம், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், ஆயக்கட்டுதாரர்களின் சங்கம் உள்ளிட்டோர் தங்களது விண்ணப்பத்தை பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் உதவி செயற்பொறியாளருக்கு அனுப்பிவைக்க வேண்டும். தன்னெழுச்சியாக முன்வருவோர் குடிமராமத்து பணிக்கான  செலவில் 10 சதவீதத்தை தொகையாக அல்லது உடல் உழைப்பாக அளிக்கலாம்.
    மேலும், மேற்கண்ட ஏரிகள் தவிர பிற ஏரிகளில் குடிமராமத்து பணி மேற்கொள்ள விரும்புவோரும் தங்களது விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 224406 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai