Enable Javscript for better performance
தேசிய சாகச விருது:  விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய சாகச விருது:  விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 02nd March 2017 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் 2017ஆம் ஆண்டிற்கான தேசிய சாகச விருதுக்கு தகுதியான பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்கள் விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராமசுப்ரமணிய ராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    ஒவ்வொரு ஆண்டும் நாட்டுக்கு பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்திய அரசின் சார்பில் 2017ஆம் ஆண்டுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதிற்கான விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-28364322 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.                     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai