Enable Javscript for better performance
மார்ச் 6 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு:விண்ணப்பம் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    மார்ச் 6 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு: விண்ணப்பம் விநியோகம்

    By DIN  |   Published on : 02nd March 2017 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 6 முதல் 22ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்பட உள்ளன.
    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 முறையே, ஏப். 29, 30ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
    இதற்கான விண்ணப்பங்களை, பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, வி.களத்தூர், அகரம், களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒதியம் வான்புகழ் மேல்நிலைப்பள்ளி, சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
    விண்ணப்பக் கட்டணமாக ரூ. 50 செலுத்தி மார்ச் 6 முதல் 22 ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வெங்கடேசபுரம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் மார்ச் 6 முதல் 23 ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை பெறப்படும் என தெரிவித்துள்ளார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி.
    அரியலூரில்...
    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நா.மாரிமுத்து புதன்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:
    விண்ணப்பங்கள் 1. அரியலூர் தூய மேரி உயர்நிலைப்பள்ளி, 2.அரியலூர் ஆர்.சி.நிர்மலா காந்தி நடுநிலைப்பள்ளி, 3.திருமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, 4.கீழப்பழுவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, 5.தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 6.நடுவலூர் ஆர்.சி.பாரத மாதா, 7. ஜயங்கொண்டம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி,8. ஜயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி,9.விளந்தை ஆண்டிமடம்(மே) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 10.ஆண்டிமடம் புனித மாத்தினாள் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, 11. செந்துறை நெய்வனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 12. செந்துறை விழுப்பணங்குறிச்சி அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அரியலூர் கல்வி மாவட்டத்தில் அரியலூர் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியிலும்,உடையார்பாளையம்  கல்வி மாவட்டத்தில் ஜயங்கொண்டம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் மார்ச் 23ஆம் தேதி வரை அளிக்கலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai