Enable Javscript for better performance
ரூபெல்லா தடுப்பூசி முகாம்: தலைமை ஆசிரியர்களுடன் ஆட்சியர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    ரூபெல்லா தடுப்பூசி முகாம்: தலைமை ஆசிரியர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

    By DIN  |   Published on : 02nd March 2017 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்திற்கு தலைமை வகித்து, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத் பேசியது: 9 மாதம் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில், தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசியை அளிக்கும்போது போலியோவைப் போல, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்களை தமிழகத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்க முடியும். இதுவரை, தடுப்பூசி வழங்கப்படாத குழந்தைகளுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் ஆராம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் வழங்கப்பட உள்ளது.
    இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் பக்க விளைவுகளோ, பாதிப்போ ஏற்படாது, மிகவும் பாதுகாப்பானது. எனவே, இந்த தடுப்பூசி முகாம் முற்றிலுமாக வெற்றியடைய பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது என்றார் அவர்.
    கூட்டத்தில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இரா. எலிசபெத், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் அ. பிரேம்குமார், அ. மணிவண்ணன், மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த 31 தலைமை ஆசிரியர்கள், தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai