Enable Javscript for better performance
"ரோபோக்கான்' போட்டியில் பங்கேற்கும்சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    "ரோபோக்கான்' போட்டியில் பங்கேற்கும் சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள்

    By DIN  |   Published on : 02nd March 2017 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்டிர மாநிலத்தில் வியாழக்கிழமை (மார்ச் 2) தொடங்கும் ரோபோக்கள் போட்டியில் பெரம்பலூர் சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
    மகாராஷ்டிரா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி என்ற தொழில்நுட்ப கல்வி நிலையம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு ரோபோக்கள் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, “ரோபோக்கான்- 2017’ போட்டியில் இந்திய அளவில் 110 கல்லூரிகளும், தமிழகத்தில் 6 கல்லூரிகளும் பங்கேற்க தேர்வாகி உள்ளன.
    இதில், பெரம்பலூர் சீனீவாசன் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை (மார்ச் 2) முதல் 4 ஆம் தேதி வரை நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
    கல்லூரியின் இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர்கள்  பிரதீப்குமார், வினோத் ஆகியோர் வழிகாட்டுதலில், மாணவர்கள் சேதுபதி, சக்தி, அபிலாஷ், மரியஜான், தினேஷ்குமார், லோகேஷ், விஜய்சூரியா, லாவண்யா, மதுகோமல் மன்னா, பாலகிருஷ்ணன், கண்ணதாசன், பாலமுருகன், சங்கரி, ஆனந்தி, சுபாஷினி ஆகியோர் கடந்த 2 மாதங்ளாக வட்டு எரியும் ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.  
    இந்த ரோபோ 1 மற்றும் 2 மீட்டர் தூரத்தில் வட்டுக்களை வீசும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போட்டியில் பங்கேற்கும் ரோபோ எவ்வாறு செயல்பட உள்ளது என்பது தொடர்பான செயல் விளக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
    தொடர்ந்து, போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனீவாசன்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai