Enable Javscript for better performance
அம்மா உப்பை அதிகளவில் விற்ற ரேஷன் கடை பணியாளருக்குப் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    அம்மா உப்பை அதிகளவில் விற்ற ரேஷன் கடை பணியாளருக்குப் பரிசு

    By DIN  |   Published on : 03rd March 2017 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவில் அம்மா உப்பு விற்பனை செய்த ரேஷன் கடை பணியாளர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம், 2015- 16-ல் அதிகளவில் அம்மா உப்பு விற்பனை செய்த பணியாளருக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்க தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் த. உதயச்சந்திரன் உத்திரவிட்டார்.
    அதன்படி, பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மண்டல இணைப் பதிவாளர் சிவ. முத்துக்குமாரசாமி, வேப்பந்தட்டை வட்டம், வி.ஆர்.எஸ்.எஸ். புரம் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்க விற்பனையாளர் டி. கருப்பையாவுக்கு முதல் பரிசாக ரூ. 2,500, ஆலத்தூர் வட்டம், நக்கசேலம் தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்க விற்பனையாளர் எஸ். செல்வத்திற்கு 2 ஆம் பரிசாக ரூ. 1,500, வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க விற்பனையாளர் எஸ். நற்பிணைக்கு 3 ஆம் பரிசாக ரூ. 1,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
    பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் ஆர். கிருஷ்ணசாமி, மண்டல இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் ப. சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai