Enable Javscript for better performance
தடகளப் போட்டியில் வென்ற மாணவிக்கு ஊக்கத்தொகை- Dinamani

சுடச்சுட

    

    தேசியளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வழங்கப்பட்ட ஊக்க உதவித்தொகைக்கான காசோலையை அளித்தார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
    2015-16 ஆம் ஆண்டுக்கான 27-வது தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டிகள் ஆந்திரப் பிரதேச மாநிலம், காக்கிநாடாவில் செப். 22 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது.
    இப்போட்டிகளில் 16 வயதிற்குள்பட்டோர் பிரிவில் என். நாகப்பிரியா, பென்டாத்லான் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்ததற்காக ஊக்க உதவித் தொகை ரூ. 6 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வழங்கினார்.
    இந்த உதவித்தொகை பெறுவதற்கு, மாவட்டத்தில் 2 வீராங்கனைகள், 1 வீரர் என 3 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
    இவர்களில் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் விளையாட்டு விடுதி மாணவி என். நாகப்பிரியாவிற்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
    மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்பிரமணியராஜா, தடகளப் பயிற்றுநர் க. கோகிலா ஆகியோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai