Enable Javscript for better performance
தொடக்க நிலை ஆசிரியர்களுக்குப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம், பெரம்பலூர் வட்டார வளமையத்திற்குள்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பிரிட்டீஷ் கவுன்சில் என்னும் தலைப்பில் ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டது.
    வட்டார வளமைய மேற்பார்வையாளர் மு. ரவீந்திரன் தொடக்கி வைத்தார். மாவட்ட திட்ட அலுவலர் பாஸ்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.
    பயிற்சி வகுப்பில் ஆங்கில வகுப்பறையில் எளிமையாக ஆங்கிலம் கற்பிப்பது எப்படி, ஆங்கிலத்தில் மாணவர்கள் எவ்வாறு பேசுவது, ஆங்கில இலக்கண முறைகள், ஆங்கிலத்தில் வாசித்தல் மற்றும் எழுத்துத் திறனை மேம்படுத்துதல் குறித்து, ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர் மு. செல்வி பயிற்சி அளித்தார். இதில் பெரம்பலூர் வட்டார வளமையத்திற்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் 124 தொடக்க நிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai