Enable Javscript for better performance
பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்: பெரம்பலூரில் 9,270 பேர், அரியலூரில் 8,370 பேர் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்: பெரம்பலூரில் 9,270 பேர், அரியலூரில் 8,370 பேர் எழுதினர்

    By DIN  |   Published on : 03rd March 2017 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் 9,270 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் 24 மையங்களில் நடைபெறும் தேர்வில் 4,701 மாணவர்கள், 4,569 மாணவிகள் என மொத்தம் 9,270 பேர் பங்கேற்றுள்ளனர். தேர்வு மையத்துக்கு முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளராக 32 தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    இதேபோல, 24 தேர்வு மையங்களுக்கும் துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலராக 32 ஆசிரியர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாக 540 ஆசிரியர்களும், 73 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வுப் பணிகளில் 692 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  
    மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில், கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினரைக் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. 9 வழித்தட அலுவலர்களுடன், ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
    பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்களைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி. அரியலூரில்... தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வை அரியலூர் மாவட்டத்தில் 8,370 மாணவ, மாணவிகள் எழுதினர்.மாவட்டத்தில் 26 தேர்வு மையங்களில், தேர்வெழுத விண்ணப்பித்திருந்த 72 பள்ளிகளைச் சேர்ந்த 8,445 மாணவ,மாணவர்களில் 8370 பேர் மட்டும் தேர்வெழுதினர். 75 பேர் தேர்வெழுத வரவில்லை. இந்தத் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் 10 பேர் எழுதினர். அவர்களுக்கு ஒரு மணிநேரம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
    தேர்வு மையங்களைக் கண்காணிக்க, முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 26 பேர், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் 3 பேர், துறை அலுவலர்கள் 26 பேர், கூடுதல் துறை அலுவலர்கள் 3 பேர், அறை கண்காணிப்பாளர்கள் 480 பேர் மற்றும் 70 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன.
    அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து பார்வையிட்டார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai