Enable Javscript for better performance
ஊட்டச்சத்து மைய உதவியாளர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சத்துணவு மாவுகளை விற்பனை செய்ய முயன்ற, ஊட்டச்சத்து மைய உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
    வேப்பந்தட்டை வட்டம், அ.குடிகாடு கிராமத்தில் உள்ள ஊட்டச்சத்து மையத்தில் உதவியாளராகப் பணியாற்றிய ராஜம்மாள் (48), கடந்த 1 ஆம் தேதி இரவு குழந்தைகளுக்கு வழங்குவதற்காக ஊட்டச்சத்து மையத்தில் வைக்கப்பட்டிருந்த சத்துமாவு மூட்டைகளை விற்பனை செய்ய முயன்றதாக தெரிகிறது.
    இதையறிந்த அப்பகுதி மக்கள், வட்டார ஊட்டச்சத்து அலுவலர் அருணாவிற்கு தகவல் அளித்தனர். அவர், அங்கு சென்று மேற்கொண்ட விசாரணையில் சத்துமாவு மூட்டைகளை விற்பனை செய்ய முயன்றது உண்மை என தெரியவந்தது.
    இதையடுத்து, ஊட்டச்சத்து மைய உதவியாளர் ராஜம்மளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai