Enable Javscript for better performance
தீ விபத்து: சுமை ஆட்டோ எரிந்து நாசம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த சுமை ஆட்டோ வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    சென்னையிலிருந்து திருச்சி நோக்கி மேஜைகளை ஏற்றிக்கொண்டு சுமை ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஆட்டோவை, சென்னையைச் சேர்ந்த பீட்டர் (40) ஓட்டிவந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே வெள்ளிக்கிழமை மாலை வந்தபோது, சுமை ஆட்டோவிலிருந்து புகை வந்தால், ஆட்டோவை நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கிவிட்டார். அப்போது, திடீரென சுமை ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது.  
    இதில், ஆட்டோ மற்றும் அதிலிருந்த மேஜைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பால்ராஜ் உள்ளிட்ட தீயணைப்பு படை வீரர்கள் அங்குச் சென்று தீயை அணைத்தனர்.
    இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai