Enable Javscript for better performance
மார்ச் 7-ல் வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் பிரிவு சாலையில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில், வெள்ளாடு வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி முகாம் மார்ச் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
    இதில், வெள்ளாடு வளர்ப்பு இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரில் சென்று அல்லது 04328-291459 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம் என அந்த மையம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai