Enable Javscript for better performance
குரும்பலூரில் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே கோயிலுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
    குரும்பலூரில் பிரசித்தி பெற்ற ஆலடி முத்துசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, சனிக்கிழமை மாலை சுவாமி குடியழைத்தல் நிகழ்ச்சிக்காக, அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் சென்றனர். அப்போது, கோயிலுக்கு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இதையறிந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அவர் மறுத்துவிட்டாராம்.
    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai