Enable Javscript for better performance
தொடர் விபத்து: மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி மக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    தொடர் விபத்து: மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி மக்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 05th March 2017 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தொடர்ந்து நிகழும் சாலை விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, கிராம மக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
    வேப்பந்தட்டை அருகேயுள்ள தேவையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவாயி மகன் சீனிவாசன் (40).
    கூலித் தொழிலாளி. இவர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை சனிக்கிழமை கடந்து செல்ல முயன்றபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற டேங்கர் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார்.
    இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் சீனிவாசனை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
    இதனிடையே, தேவையூர் பகுதியில் அடிக்கடி நிகழும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, சீனிவாசனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மங்களமேடு சரக துணைக் கண்காணிப்பாளர் ஜவகர்லால் தலைமையிலான போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், மேம்பாலம் அமைக்க உறுதி அளிக்க வேண்டுமென வலியுறுத்தி, மறியலை கைவிட பொது மக்கள் மறுத்தனர். இதையடுத்து, போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
    சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai