Enable Javscript for better performance
போக்குவரத்துக்கு இடையூறாக பெருகி வரும் தள்ளுவண்டி கடைகள்- Dinamani

சுடச்சுட

    

    போக்குவரத்துக்கு இடையூறாக பெருகி வரும் தள்ளுவண்டி கடைகள்

    By DIN  |   Published on : 05th March 2017 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக பெருகிவரும் தள்ளுவண்டி கடைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெரம்பலூர் நகரில் பழைய மற்றும் புறநகர் பேருந்து நிலையங்கள், வடக்குமாதவி சாலை, எளம்பலூர் சாலை, கனரா வங்கி சாலை, பாலக்கரை, சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், திருநகர், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படும்.
    மக்கள் நடமாட்டத்தை கருத்தில் கொண்டு, இப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளை ஆக்கிரமித்து அதிக அளவில் தள்ளுவண்டி கடைகள் மூலம் வியாபாரம் செய்யப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் பழக்கடைகள், இரவு நேரங்களில் டிபன் கடைகள், துரித உணவகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கடை வைத்திருப்போரிடம் நாள் ஒன்றுக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை நகராட்சியில் ஒப்பந்தம் எடுத்துள்ள நபர்களால் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
    இந்நிலையில், சாலையின் இருபுறங்களிலும், போக்குவரத்துக்கு இடையூறாக நாளுக்கு நாள் தள்ளுவண்டி கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    வியாபாரிகள் பேருந்து நிலையத்துக்குள் வீசும் கழிவுப் பொருள்களுக்காக மாடுகள் பேருந்து நிலையத்தை சுற்றித் திரிகின்றன. இவ்வாறு பேருந்து நிலையத்துக்குள் திரியும் மாடுகள் முட்டி ஏரளாமானோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தள்ளுவண்டிகளால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் எதிரும், புதிருமாக வரும் கனரக மற்றும் பேருந்துகளுக்கு வழி கொடுக்க முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தரைக் கடைகளையும், தள்ளுவண்டி கடைகளையும் கட்டுப்படுத்த வேண்டிய நகராட்சி நிர்வாகம் அவற்றை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களிடம் கட்டணம் வசூலிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளதால், போலீஸாரால் தள்ளுவண்டி கடைகளை அகற்ற முடியாத நிலை உள்ளது.
    இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் நெரிசல் ஏற்பட்டு வருவதைல், பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வரும் தள்ளுவண்டி கடைகளுக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்து, இடையூறு ஏற்படுத்தி வரும் சிறு வியாபாரிகள் பாதிக்க வகையில் போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai