Enable Javscript for better performance
மத்திய அரசு விருது பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசு விருது பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 05th March 2017 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் பல்வேறு விருதுகள் பெற, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
    இதுகுரித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ம. ராமசுப்ரமணியராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பு:விளையாட்டுத் துறையில் தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டில் சம்பந்தப்பட்டோருக்கு மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
    அதன்படி, நிகழாண்டிற்கான அர்ஜுனா விருது, ராஜுவ் காந்தி கேல் ரத்னா விருது, தயான் சந்த் விருது, துரோணாச்சார்யா விருது, ராஸ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் விருது பெறுவதற்கான விண்ணப்பங்களை ஏப். 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். மேற்கண்ட விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள்
    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர்- செயலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா சென்னை 600 084 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai