Enable Javscript for better performance
குரும்பலூர் ஆலடி முத்துசாமி கோயில் குடமுழுக்கு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள ஆலடி முத்துசாமி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
    குரும்பலூரில் எழுந்தருளியுள்ள ஆலடி முத்துசாமி கோயில் கருப்பண்ணசாமி, சித்தன்ன கருப்புசாமி, சந்தன கருப்பு மற்றும் பரிவார தெய்வங்கள் கொண்ட ஆலடி முத்துசாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, சனிக்கிழமை காலை திருவிளக்கு ஏற்றப்பட்டு அனுக்னஞ, தன பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமமும், மாலையில் தேவார திருமுடி பாராயணம், நவக்கிரக பூஜை, வேதிகா பூஜை, பிராண பிரதிஷ்டை சகஸ்ரநாம பாராயணம் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டன.
    ஞாயிற்றுக்கிழமை காலை தேவார திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பாராயணம், கலச பூஜை, விசேஷ திரவிய ஹோமங்கள், நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி ஆகியவை நடத்தப்பட்டன. தொடர்ந்து, மூலவர் கோபுர விமானத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.  இதில், பெரம்பலூர், குரும்பலூர், அம்மாபாளையம், பாளையம், செஞ்சேரி, ஈச்சம்பட்டி, மேட்டாங்காடு, திருப்பெயர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    விழாவுக்கான ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் மற்றும் கோயில் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai