Enable Javscript for better performance
மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    பெரம்பலூர் அருகேயுள்ள நாவலூர் கிராமம், இந்திரா காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் சேகர் (27). இவரது நண்பர் லாடபுரத்தை சேர்ந்த சேகர் மகன் சுதாகர் (27). இவர், அரும்பாவூர் மின்வாரியத்தில் மின் அளவு கணக்கெடுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இருவரும் பெரம்பலூரில் இருந்து எசனை வழியாக நாவலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். எசனை ரெட்டைமலை சந்து ஏரிக்கரையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    தகவலறிந்த பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆரோக்கியசாமி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்த சுதாகரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.  

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai