Enable Javscript for better performance
வரகுபாடியில் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டடம் திறப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    வரகுபாடியில் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டடம் திறப்பு விழா

    By DIN  |   Published on : 06th March 2017 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே எம்.பி. தொகுதி
    மேம்பாட்டு நிதி ரூ. 6 லட்சத்தில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    வரகுபாடி கிராமத்தில் சிதம்பரம் தொகுதி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு, ஆலத்தூர் ஒன்றிய செயலரும், ஆவின் இயக்குநருமான என்.கே. கர்ணன் தலைமை வகித்தார்.  பால்வள துணை பதிவாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். குன்னம் எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரன், பால் உற்பத்தியாளர் சங்க கட்டடத்தை திறந்துவைத்தார்.
    இந்த விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவாசகம், பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள் செ. வீரமுத்து, சண்முகம், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் துரைசாமி வரவேற்றார். செயலர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai