Enable Javscript for better performance
ஓய்வூதியர் சங்க கிளை தொடக்க விழா- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட கிளை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. தொடக்க விழாவிற்கு, சங்க பொறுப்பாளர் கி. முகுந்தன் தலைமை வகித்தார்.
    தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் மருதை, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசும், அரசு அலுவலர், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்காக உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு ஓய்வூதியர்களுக்கு குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1.50 லட்சமாக உயர்த்தித்தர வேண்டும் என்பன உள்பட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai