Enable Javscript for better performance
சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
    உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நசீமாபானு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார், கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில், அரசுத் துறைகளுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள். தனியார் நிலங்களில் உள்ள சீமக்கருவேல மரங்களை அழிப்பதற்கு பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai