Enable Javscript for better performance
பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 543 மனுக்கள்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர், பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 543 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து பெற்ற 274 கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    கூட்டத்தில், ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், வங்குடி கிராம ஊராட்சி செயலாளராகப் பணிபுரிந்த து. பரமசிவம், பணியின் போது உயிரிழந்ததால் அவரது மனைவி கே. ஜெயமேனகா காந்தி என்பவருக்கு கருணை அடிப்படையில் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளாராக நியமனம் செய்யப்பட்ட பணி ஆணையினையும், உடையார்பாளையம் வட்டம், வடவீக்கம் கல்லாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அங்காடி விற்பனையாளராகப் பணிபுரிந்த எம். பிருந்தாதேவி பணியிலிருக்கும் போது கடந்த 03.02.2017 அன்று விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு சேரவேண்டிய வருங்கால வைப்புநிதி தொகை ரூ. 76,103 மற்றும் ஈட்டிய விடுப்பு மற்றும் பணிக்கால ஊதியமாக ரூ. 18,660 ஆக கூடுதல் ரூ.94,763-க்கான காசோலையினை அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கினார்.
    பெரம்பலூரில்.....
    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 269 மனுக்கள் பெறப்பட்டன.
    கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் தலைமை வகித்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பி. துரை, உதவி திட்ட அலுவலர் அமர்சிங் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai