Enable Javscript for better performance
வெளிநாட்டில் கொத்தடிமைகளாக உள்ளவர்களை மீட்டுத்தரக்கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாட்டில் கொத்தடிமைகளாக உள்ளவர்களை மீட்டுத்தரக்கோரி மனு

    By DIN  |   Published on : 07th March 2017 06:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெளிநாட்டில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 நபர்களை மீட்டுத்தர வேண்டுமென, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
    இதுகுறித்து, வேப்பந்தட்டை வட்டம், வல்லாபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் அளித்த மனு:
    மேற்கண்ட முகவரியை சேர்ந்த கண்ணன், ரவி, பெரியசாமி, கந்தசாமி, செல்வராஜூ ஆகியோர் கடந்த ஜூலை 2016-ல் ஓமன் நாட்டிற்கு பணிக்கு சென்றனர்.
     இதுவரை அவர்களுக்கு நிறுவனத்தில் சம்பளம் வழங்கவில்லை. மேலும் இதுகுறித்து, கேட்டதற்கு அவர்கள் 5 பேரையும் அடித்து, கொத்தடிமைகளாக வைத்துள்ளனர். எனவே, அவர்களை மீட்டுத்தரவும், சம்பளத் தொகையை பெற்றுத்தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai