Enable Javscript for better performance
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு

    By DIN  |   Published on : 07th March 2017 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில், 2016 ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்வில், மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசுத் தொகையும் திங்கள்கிழமை வழங்கினார் முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி.
    பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல் 2016-ல் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு அரசுப்பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 2 ஆம் இடம் பிடித்த பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளி மாணவி இ. செளந்தர்யா, பெரம்பலூர் புனித ஜோசப் பள்ளி மாணவன் எஸ்.ஆர். செல்வகணேஷ் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசுத் தொகையாக ரூ. 20 ஆயிரமும், மாநில அளவில் 3 ஆம் இடம் பெற்ற பெரம்பலூர் தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவிகள் இ.செ. மிருணாளினி, கே. லிஷா, இரா.நெ. ராஷ்மி பிரியா ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசுத் தொகையாக ரூ. 15 ஆயிரமும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
    மேற்கண்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பரிசுத் தொகைக்கான காசோலைகளையும் திங்கள்கிழமை வழங்கினார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க. முனுசாமி.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai