Enable Javscript for better performance
அடிபம்பு திருட்டு: ஆட்சியரிடம் புகார்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அடிபம்பு திருடுபோனது  மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
    இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சாஹீஸ் ஹமீது அளித்த மனு:
    லப்பைக்குடிகாடு பகுதியில் தண்ணீர் பஞ்சம் அதிகம் உள்ளது. இந்நிலையில், கடந்த 2012- 2013-ல் ரூ. 4.50 லட்சத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதன்மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது.  ஆனால் அந்த அடிபம்பை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதால் தற்போது தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
    மற்ற அடிபம்புகள் அனைத்தும் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த அடிபம்பு மட்டும் திருடுபோய்விட்டது. இந்த பிரச்னையில் ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai