Enable Javscript for better performance
குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலத்தூர் வட்டக்குழு கூட்டம், வட்டக்குழு உறுப்பினர் பி. கிருஷ்ணசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    மாவட்டச் செயலர் ஆர். மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். தமிகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமுள்ளதால், அதைக் களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாட்டைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி வருவதால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.  
    பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். ரேஷன் கடைகளில் தட்டுப்பாடின்றி பருப்பு, சமையல் எண்ணெய் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். பெப்சி, கோக் ஆகிய நிறுவனங்களுக்கு ஆற்றுநீரைத் தாரை வார்ப்பதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கட்சி நிர்வாகிகள் எ. கணேசன், ஆர். முருகேசன், எஸ். அகஸ்டின், எம். கருணாநிதி, ஜெயலட்சுமி, சி. சண்முகம், பி. ரெங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai