Enable Javscript for better performance
திட்டப்பணிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் 212 திட்டப் பணிகளை திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி மூலம் தொடக்கிவைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.  
    திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி,
    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூரில் ரூ. 36.28 கோடியில் கட்டப்பட்டுள்ள பால்பண்ணை கட்டடம், வேப்பந்தட்டையில் ரூ. 7.25 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடம்,
    புதுக்குறிச்சியில் ரூ. 7.08 கோடியில் கட்டப்பட்ட துணை மின் நிலையம், பெரம்பலூர் மற்றும் குரும்பலூரில் ரூ. 2.91 கோடியில் கட்டப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவியர் விடுதி, பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ. 11.97 கோடியில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், ஊரகப்பகுதிகளில் ரூ. 3.63 கோடியில் கட்டப்பட்ட 173 பசுமை வீடுகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் என ரூ. 85.69 கோடியில் 212 திட்டப் பணிகளை காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
    தொடர்ந்து, வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மண்டல இணை இயக்குநர் (கல்லூரிக் கல்வி) செந்தமிழ்ச்செல்வி, கல்லூரி முதல்வர் ராமராஜ் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல, பாடாலூர் பால்பண்ணையில் ஆவின் துணைப் பொது மேலாளர் பாபு, மேலாளர் மருத்துவர் அன்பழகன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
    அரியலூரில்.. அரியலூர் மாவட்டத்தில் ரூ. 13.49 கோடியிலான திட்டப் பணிகளை தமிழக முதல்வர்  தொடக்கி வைத்தார்.திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில், அரியலூர் மாவட்டத்தில் ரூ. 13.49 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட அரியலூர் சிலைகள் பாதுகாப்பு மையக் கட்டடம்,செந்துறை பத்திர பதிவு அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட கட்டடங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai