Enable Javscript for better performance
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் அருகே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி விஷம் குடித்து திங்கள்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார்.
    ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் அருகேயுள்ள மருதடி கிராமத்தைச் சேர்ந்தவர் ம. சுப்ரமணியன் (53), விவசாயி. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த அப்துல்அஜீஸ் என்பவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் மக்காச்சோள சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் பயிர்கள் அனைத்தும் கருகி மகசூல் இழப்பு ஏற்பட்டது.  
    இந்நிலையில் நிகழாண்டுக்கான குத்தகைத் தொகையை கடன் வாங்கிச் செலுத்திய சுப்ரமணியன் மனைவி அஞ்சலை, தங்களது வறுமை நிலையை எண்ணி மனமுடைந்து கடந்த 4.1.2017-ல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாததாலும், மகசூல் இழப்பு ஏற்பட்டதாலும் மனமுடைந்த சுப்ரமணியன் திங்கள்கிழமை இரவு அவரது வயலில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.
    தகவலறிந்த பாடாலூர் போலீஸார் அவரது சடலத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து இறந்தவரின் மகள் மணிமேகலை (18) அளித்த புகாரின்பேரில் பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai