Enable Javscript for better performance
வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகைக்கான ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
    பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு, அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெற்பயிர் மற்றும் இதர பாசனப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 5,465, மானாவாரிப் பயிர்களுக்கு ரூ. 3,000, நீண்டகாலப் பயிர்களுக்கு ரூ. 7,287, பட்டுப்புழு வளர்ப்புக்கு ரூ. 3,000 என்ற அடிப்படையில் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
    இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல் கட்டமாக பிர்காவுக்கு ஒரு விவசாயி வீதம் 11 விவசாயிகளுக்கு ரூ. 78,806 மதிப்பிலான நிவாரண உதவித்தொகைக்கான ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார், பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.
    பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியது:
    பெரம்பலூர் மாவட்டத்தில் 83,394 விவசாயிகளின் 79,000 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ. 64.96 கோடி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் அவரவர் வங்கிக் கணக்குகளில் நிவாரண உதவித்தொகை வரவு வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.
    ஒரு வாரத்திற்குள் அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணத்தொகை வரவு வைக்கப்படும் என்றார் நந்தகுமார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai