Enable Javscript for better performance
எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு தொடங்கியது: பெரம்பலூரில் 9649 பேர் எழுதினர்- Dinamani

சுடச்சுட

    

    எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு தொடங்கியது: பெரம்பலூரில் 9649 பேர் எழுதினர்

    By DIN  |   Published on : 09th March 2017 06:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசு பொதுத் தேர்வில் 9,649 பேர் பங்கேற்றனர். 113 மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை.
    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 136 பள்ளிகளை சேர்ந்த 5,256 மாணவர்களும், 4,506
    மாணவிகளும் என மொத்தம் 9,762 பேர் தேர்வெழுத விண்ணப்பம் செய்திருந்தனர்.
    தேர்வெழுதுவதற்காக 32 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
    பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க. முனுசாமி கூறியது:  
    அரசு பொதுதேர்வில் 9,762 பேர் பங்கேற்று, தேர்வு எழுதுகின்றனர். இதில், புதன்கிழமை நடைபெற்ற தேர்வில் 113 பேர் பங்கேற்கவில்லை.
    இத்தேர்வு மையங்களுக்கு காவல் துறையினரின் பாதுகாப்புடன் வினாத்தாள்களை கொண்டுசெல்லும் வகையில், 9 வழித்தட அலுவலர்களும், 70 பேர் பறக்கும் படையினராகவும், 555 பேர்
    தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களாகவும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும், மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் அவர்.      

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai