Enable Javscript for better performance
கல்வி நிறுவனங்களில்  மகளிர் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில் உள்ள கல்வி நிறுவனங்களில் உலக மகளிர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவிற்கு, கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரம்பலூர் மகிளா நீதிமன்ற நடுவர் கே. மோகனப்பிரியா சிறப்புரையாற்றினார். தொடந்து,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவிகள் புவனேஸ்வரி வரவேற்றார். லிண்டா நன்றி கூறினார்.
    ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி: பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு, கல்லூரி தாளாளர் எம். சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலர் எம்.எஸ். விவேகானந்தன், கல்லூரி முதல்வர் கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நஷீமாபானு, மகளிர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பேச்சு, ஓவியம், வினாடி- வினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து, சார்பு நீதிபதி ஜெயந்தி பேசினார். இதில், கல்லூரி துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.ரோவர் கலைக் கல்லூரி: பெரம்பலூர் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவிற்கு கல்லூரி தாளாளர் கே. வரதராஜன் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர் மகாலெட்சுமி வரதராஜன், கல்லூரி முதல்வர் வெ. அயோத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா சிறப்புரையாற்றினார்.
    விழாவில், துணை முதல்வர் மகேந்திரன், பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai