Enable Javscript for better performance
பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச் 11-ல் ரேஷன் குறைதீர் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச் 11-ல் ரேஷன் குறைதீர் முகாம்

    By DIN  |   Published on : 09th March 2017 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும்
    மார்ச் 11-ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
    இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
    பெரம்பலூர் வட்டம், வேலூர் கிராமத்தில் பெரம்பலூர் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் இரா. புஷ்பவதி தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூர் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) மு. துரை தலைமையிலும், குன்னம் வட்டம், ஒகளூர் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கு. மோகன் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், திம்மூர் கிராமத்தில் பெரம்பலூர் பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் ஆர். கிருஷ்ணசாமி தலைமையிலும் மார்ச் 11 ஆம் தேதி காலை 10 மணி அளவில் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.  
    இந்த முகாமில், மேற்கண்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம்.    

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai