Enable Javscript for better performance
விபத்து நஷ்ட ஈடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ராமர் மனைவி செல்லம்மாள் (65). இவர், கடந்த 11.4.2011-ல், சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு அரசுப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம், மேட்டாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
    இதனிடையே, அவரது மகன் கஜேந்திரன் (47), மகள் சாந்தக்குமாரி (40) ஆகியோர் விபத்து நஷ்ட ஈடு வழங்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 14.11.2011-ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சத்து 4 ஆயிரம் வழங்க வேண்டுமென, கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு உத்தரவிட்டார்.
    ஆனால், நஷ்ட ஈட்டுத்தொகை வழங்கவில்லை. இதையடுத்து, 25.11.14-ல் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நஷிமா பானு, வட்டியுடன் சேர்த்து ரூ. 5,71,221 வழங்க வேண்டும் எனவும், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார்.   
    அதைத்தொடர்ந்து, ஜயங்கொண்டத்திலிருந்து துறையூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தை, நீதிமன்ற ஊழியர்கள் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டுசென்றனர்.    

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai