Enable Javscript for better performance
இன்று அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 10) நடைபெற உள்ளது.
    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் வருவாய் கிராமத்திற்குள்பட்ட வல்லாபுரம், குன்னம் வட்டம், துங்கபுரம் (தெற்கு) வருவாய் கிராமத்திற்குள்பட்ட தேனூர், காடூர் (வடக்கு), ஆலத்தூர் வட்டம், ஜெமீன் ஆத்தூர் வருவாய் கிராமத்திற்குள்பட்ட பாலம்பாடி ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
    இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு, உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பெறப்படும் மனுக்கள் கணினியில் பதியப்பட்டு ஒப்புகை ரசீது வழங்கப்படும். உடனடியாக தீர்வுகாண இயலாத விண்ணப்பங்களின் மனுதாரருக்கு 30 நாள்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும். எனவே, சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai