Enable Javscript for better performance
ஓவியப் போட்டி: மாணவர்களுக்குப் பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள லட்சுமிவிலாஸ் வங்கிக் கிளையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வங்கி வாடிக்கையாளர்களின் குழந்தைகளுக்கான மரங்கள், நமது வாழ்க்கைக்காக பெண்கள் என்ற தலைப்புகளில் ஓவியப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
    வங்கி கிளை மேலாளர் அன்ந்த நாராயணன் தலைமை வகித்தார். மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து வேளாண் அலுவலர் பிரியா, குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மெய்யம்மை, பள்ளி கணக்காளர் சங்கீதா ஆகியோர் பேசினர். விழாவில் பங்கேற்ற மகளிருக்கு, வங்கி நிர்வாகம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
    தொடர்ந்து, கிறிஸ்டியன் கல்விக் குழுமத்தின் செயலர் மித்ரா, தொழில் முனைவோர் புவனேஸ்வரி ராஜசேகர் ஆகியோர் ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கோல்டன்கேட்ஸ் பள்ளி மாணவி லட்சுமிஸ்ருதி, கேந்திரிய வித்யாலய பள்ளி மாணவி மஹதிகுருராஜ், செயிண்ட் ஜோசப் ப்ளளி மாணவர் கோபிநாத் ஆகியோருக்கு சான்றிதழ், கோப்பை வழங்கி பாராட்டினர். வங்கி ஊழியர் கோகிலா வரவேற்றார். ரேவதி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai